Thursday, October 31, 2024

நான் கதைகளை தேர்வு செய்யும் முறையை முற்றிலும் மாற்றிக் கொண்டேன்… பூஜா ஹெக்டே டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின்னர் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அவர் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலங்களில் பூஜா ஹெக்டே நடித்த சில படங்கள் தோல்வியடைந்தன.

இது குறித்து ஒரு பேட்டியில், “நான் கதைகளை தேர்வு செய்வதில் சில தவறுகளை செய்தேன், அந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்கிறேன். என் கடந்த கால படங்களை நிதானமாக ஆய்வு செய்து, நான் எந்தவித தவறுகளை செய்தேன் என்பதையும் புரிந்துகொண்டேன். இனிமேல் நான் கதைகளை தேர்வு செய்யும் முறையை முற்றிலும் மாற்றிக் கொண்டேன்.

அதிக கவனத்துடன் கதைகளை தேர்வு செய்வேன். விசித்திரமான மற்றும் தனித்துவமான கதைகளில் மட்டுமே நடிப்பேன். வரும் ஆண்டு எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார். தற்போது சூர்யா 44 படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே அதைத்தொடர்ந்து ஹெச் வினோத் விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 69 படத்தில் தற்போது நடித்துவருகிறார்.இந்திய சினிமாவில் பிசியாக வலம் வரும் இவர் பாலிவுட்டில் பூஜா ஹெக்டே, சல்மான் கானுடன் இணைந்து ‘கிசிகா பாய் கிசிகா ஜான்’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News