Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பெண்களின் பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய ரித்திகா சிங்… பாராட்டும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் பிரபலமானவர் ரித்திகா சிங். இதன்பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, மழைபிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

இந்த படத்தில் அவர் நடிப்பில் சண்டை காட்சிகள் பாராட்டுபெற்றன. மேலும், ரித்திகா சிங் குத்துச்சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களின் பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “யாரேனும் உங்களை தாக்கினால் முதலில் அவரின் தாக்குதலை தடுத்து அவருடைய வயிற்றிலும், கழுத்திலும் தாக்க வேண்டும். தொடர்ந்து வலது பக்க கழுத்தில் தாக்கினால் எதிரி சக்தி இழந்து விடுவான்” என கூறினார். ரித்திகா சிங் எதிரியை தாக்கி வீழ்த்தும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News