Thursday, October 31, 2024

பிரபல இயக்குனருடன் மாமன்னன் பட நடிகைக்கு விரைவில் டூம் டூம் டூம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனித்துவமான குரல் வடிவில் நயன்தாரா, காஜல் அகர்வால், ஸ்ரீ திவ்யா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரலை வழங்கி வரும் டப்பிங் கலைஞர் ரவீணா ரவி, பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு கிடாயின் கருணை மனு” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், அதன் பிறகு “வீரமே வாகை சூடும்”, “லவ் டுடே”, “மாமன்னன்” போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்ல, மலையாள படங்களிலும் நாயகிகளுக்கு தனது குரலை வழங்கி வருகிறார்.

இப்பொழுது, மலையாள திரைப்பட இயக்குனர் தேவன் ஜெயக்குமாரை திருமணம் செய்ய உள்ளார் ரவீணா ரவி. இவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இதுபற்றி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நிஜமான நாய்களுடன் உருவாக்கிய “வாலாட்டி” படத்தை இயக்கியவரும் தேவன் ஜெயக்குமார் தான்.

அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நாய்க்கு டப்பிங் குரலை வழங்கியது ரவீணா ரவி. இது காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதை பற்றி அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

- Advertisement -

Read more

Local News