தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானி, திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததன் பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் சினிமாவில் குணசித்திர வேடங்களில் தோன்றினார். 2018ம் ஆண்டு ‘எழுமின்’ என்ற படத்தில் கதாநாயகியாக, நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்தார். தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து ‘நிழற்குடை’ என்ற படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். (நடிகை தேவயானி நடித்த நீ வருவாய் என 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி நமது டூரிங் டாக்கீஸ்-ல் அப்படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களையும் விழா நடத்தியது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை தேவயானி பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அதை தெரிந்து கொள்ள கீழேயுள்ள யூட்யூப் லிங்க்-ஐ கிளிக் செய்து காணலாம்.மேலும் வீடியோக்களை காண நமது TOURING TALKIES YOUTUBE சேனலுக்கு சென்று காணுங்கள்)
இந்த படத்தில் விஜித் நாயகனாகவும், கண்மணி மனோகரன் மற்றொரு நாயகியாகவும் நடித்துள்ளனர். இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தர்ஷன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோதி சிவா தயாரித்துள்ள இந்த படத்தை, சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். வெளிநாட்டு மோகத்தால் பாதிக்கப்படும் இன்றைய இளைய சமுதாயத்தின் பாதையை மையமாகக் கொண்டு, ஒரு திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.