Wednesday, October 30, 2024

எல்.சி.யூ-ல் இணைந்த ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ்… லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ! #BENZ

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவர் தயாரிக்கும் இரண்டாவது படமாக ‘பென்ஸ்’ என்கிற பெயரில் உருவாக இருப்பதை அறிவித்தனர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்களும் தயாரிக்கின்றன.

இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் கதை அடிப்படையில் உருவாகிறது, மேலும் இதை ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கின்றார். தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியிருக்கின்றன.

நேற்று ராகவா லாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு ‘பென்ஸ்’ படத்தை ‘லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்’ (எல்.சி.யூ) இல் சேர்த்ததாக ஒரு அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் தோன்றியுள்ளார். கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்களை தொடர்ந்து பென்ஸ் படமும் எல்சியூவில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News