Tuesday, October 29, 2024

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புல்லட் மற்றும் கால பைரவா… பிறந்தநாளையொட்டி வெளியான ஸ்பெஷல் போஸ்டர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் இயக்கி நடித்த காஞ்சனா தொடர் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில், திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகி வரும் புல்லட் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் இன்னசி பாண்டியன் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடித்த டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். இதேபோல, அவர் நடிக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பு போஸ்டரும் வெளிவந்துள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25ஆவது படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு “கால பைரவா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்க, கொனிரு சத்யநாரதனா மற்றும் நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ரமேஷ் வர்மா இதற்கு முன் ரக்ஷடு மற்றும் கில்லாடி போன்ற படங்களை இயக்கியவர். கால பைரவா திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த பான் இந்தியன் சூப்பர் ஹீரோ கதையாக உருவாக உள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டரில் ராகவா லாரன்ஸ் மிகவும் வீரத்துடன் தோற்றமளிக்கிறார், பின்னணியில் பாம்பு மற்றும் பைரவா கடவுளின் உருவங்கள் காணப்படுகின்றன. படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News