Monday, October 28, 2024

ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்-ஐ நேரில் சந்தித்த இயக்குனர் பார்த்திபன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவிற்காக தனது தனித்துவமான சிந்தனைகளின் மூலம் திரைப்படங்களை இயக்கி, அதில் நடித்து வரும்வராக இருக்கிறார் பார்த்திபன். அவரது இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான “டீன்ஸ்” திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஆந்திராவின் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாணை திரு. பார்த்திபன் நேரில் சந்தித்து, தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பு குண்டூர் மாவட்டத்தின் மங்கலகிரி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு அவர்கள் பல்வேறு விஷயங்கள் மற்றும் சமூக பிரச்சனைகளை பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பவன் கல்யாண், பார்த்திபனுக்கு கடவுள் சிலைகளை பரிசாக வழங்கியதோடு, மாற்றமாக பார்த்திபன் ஒரு வீரரின் ஓவியத்தையும், தன் எழுத்தில் உருவாக்கிய ஒரு புத்தகத்தையும் அவருக்கு கொடுத்து, இருவரும் பரஸ்பர அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். பின், இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News