மலையாளத்தில் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டு வந்த இவர் மீண்டும் தமிழில் நடிக்க வந்தார். தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷின் மனைவியாக நடித்தார். படத்தில் இன்னொரு நடிகையாக சஞ்சனாவும் நடித்திருந்தாலும், முக்கியமான கதாபாத்திரம் நடிகை சுவாசிகாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.
படம் ஆரம்பிக்கும் போதே, கணவர் தினேஷ் கிரிக்கெட்டை விரும்பாததால், மைதானத்திற்கு வந்து, டிராக்டரை ஓட்டி மைதானத்தை முழுவதுமாக சேதப்படுத்தும் சுவாசிகாவின் செயல் அட்டகாசமாக இருக்கும். அந்த ஒரே காட்சியிலேயே அவர் மொத்த ரசிகர்களிடமும் கைத்தட்டலைப் பெற்றுவிட்டார்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DBnRasptiuv/?igsh=bTRqc2gzbHJiZzdu
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் மிகவும் செயற்பாட்டுடன் இருக்கும் சுவாசிகா, தனது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த லப்பர் பந்து படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசுகின்றனர்.