Thursday, October 24, 2024

பிரபல பாலிவுட் நடிகை நிஹாரிகா ரைசாடாவின் ‛சப்னா ஏ ரன் ஆப் லவ்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் பிரபல நடிகை நிஹாரிகா ரைசாடா. சூர்யவன்ஷி, ஐபி71 போன்ற ஹிந்தி படங்களிலும், பிறமொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது ‛சப்னா ஏ ரன் ஆப் லவ்’ என்ற படத்தில் நடிக்கிறார். விஷால் கெய்க்வாட் இயக்கும் இதில் ஹீரோவாக மராத்தி நடிகர் சந்தோஷ் மிஸ்கர் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் இடம் பெறும் காதல் பாடலுக்கான படப்பிடிப்பை நிஹாரிகா முடித்துள்ளார். பாடல்களை பாடலாசிரியர் சமீர் அஞ்சான் எழுதி உள்ளார்.நிஹாரிகா ரைசாடா கூறுகையில், ‛படத்தில் நைனா என்ற பெண்ணாக நடிக்கிறேன். எனது கதாபாத்திரம் மற்றும் படம் குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளேன். படத்தில் ஒரு ஸ்பெஷல் காட்சி ஒன்று உள்ளது. அதற்காகவே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அது பார்வையாளர்களை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News