Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பின்னி பெடலெடுக்கும் ரஜினியின் சப்வே ஃபைட்… வெளியான வேட்டையன் BTS வீடியோ! #Vettaiyan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “வேட்டையன்” திரைப்படம் கடந்த மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் ஞானவேல் இயக்கிய இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் போன்ற பிரபலங்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டர்களுக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இப்படம் கல்வி முறையில் உள்ள குறைகள் மற்றும் போலி என்கவுன்டர்களின் பின்புலத்தைப் பேசுகிறது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அண்டை மாநிலங்களிலும் வசூல் சாதனைகள் படைத்து வருகிறது. வசூலிலும் விமர்சனத்திலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சில கலவையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. உலகளவில் ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழாவில் இயக்குநர் த. செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதன் பின்னணியில், “வேட்டையன்” படத்தில் இடம்பெற்ற சுரங்க நடைபாதை சண்டைக்காட்சியின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ரஜினிகாந்துக்கு சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆக்சன்களை சொல்லித்தருவது, அதை ஒளிப்பதிவாளர் பதிவு செய்வது, மற்றும் இயக்குநர் ஞானவேல் காட்சியைப் பற்றிக் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

Read more

Local News