Thursday, October 24, 2024

கிரைம் த்ரில்லர் படத்தின் மூலம் கதாநாயகியான பிரபல சின்னத்திரை நடிகை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவாஜி நடிப்பில் வெளியான ‘நவராத்திரி’ படத்தில் இடம்பெற்ற ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும். அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் ‘இரவினில் ஆட்டம் பார்’ என்கிற பெயரில் ஒரு முழு நீள கிரைம் த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்தை ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர்.சேகர் தயாரித்துள்ளார். ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கி உள்ளார். கதை நாயகனாக உதயா என்கிற உதயகுமார் நடித்துள்ளார். நாயகியாக கிரேஸி நடித்துள்ளார். இவர் மல்லி, கண்மணி அன்புடன், திருமகள் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். இவர்கள் தவிர பருத்தி வீரன் சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், அடையாளம் பாண்டு, சி.எம். துரை ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஜினோபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லதம்பி இசையமைத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News