Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

4 ஆண்டுகள் கழித்து திரையில் ரசிகர்களை கவர வரும் நஸ்ரியா… ரிலீஸ்க்கு தயரான ‘சூக்ஷம தர்ஷினி’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் “ராஜாராணி” படத்தில் நடித்து பிரபலமானவர் நஸ்ரியா. “நய்யாண்டி”, “நேரம்”, “வாயை மூடி பேசவும்”, “திருமணம் எனும் நிக்கா” போன்ற படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றார். மேலும், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாள நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா, தெலுங்கில் நானியுடன் இணைந்து “அண்டே சுந்தரனிகி” என்ற படத்தில் நடித்து, அதன்பின் சில வருடங்களுக்கு பின் திரையுலகில் இருந்து ஓய்வெடுத்தார். தற்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அவர் பாசில் ஜோசப்புடன் இணைந்து நடித்து முடித்துள்ள புதிய மலையாளப் படம் “சூக்ஷம தர்ஷினி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்கும் எம்.சி.ஜித்தின், தயாரிப்பில் சமீர் தாஹிர் மற்றும் ஷைஜு காலித் இணைந்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நஸ்ரியா கடைசியாக 2020-ல் வெளியான “ட்ரான்ஸ்” என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார். அதன் பின், நான்கு ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் புதிய மலையாள திரைப்படம் நவம்பர் 22-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News