Wednesday, October 23, 2024

மிரட்டும் வித்தியாசமான லுக்கில் பிரபாஸ்… வெளியான ‘தி ராஜா சாப்’ ஸ்பெஷல் போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த பிரபாஸ், ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழடைந்தார். சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி, ரூ. 1,050 கோடிக்கும் மேல் வசூல் சாதனைப் படைத்த ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படத்தை தொடர்ந்து, அவர் தற்போது மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனிடையே, படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று நடிகர் பிரபாஸ் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை சிறப்பிக்கும் வகையில், ‘தி ராஜா சாப்’ படக்குழுவினர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு, நடிகர் பிரபாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News