Wednesday, October 23, 2024

கே.ஜி.எப் 3 வருமா வராதா? நடிகர் யாஷ் சொன்ன பதில் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2018ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான ‘KGF’ திரைப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் கன்னட திரையுலகை உலக அளவில் பேச வைத்த பெருமையை பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘KGF 2’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

‘KGF’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் யாஷ், ‘டாக்சிக்’ மற்றும் ‘ராமயணா’ என்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், ‘KGF 3’ குறித்து யாஷ் தகவல் பகிர்ந்தார்.

Yash, Vishal, Srinidhi Shetty At The ‘KGF’ Press Meet In Chennai

“நிச்சயமாக ‘KGF 3’ திரைப்படத்தை எடுப்போம். தற்போது நான் ‘டாக்சிக்’ மற்றும் ‘ராமாயணா’ படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். ‘KGF 3’ படத்திற்கான எதிர்பார்ப்பு மிக உயர்வாக உள்ளது. சரியான நேரம் வந்ததும், அதை மிகப்பெரிய பிரம்மாண்டமாக உருவாக்குவோம்,” என அவர் தெரிவித்தார். இந்த கேள்வியை இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மேன் கில் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News