Monday, November 18, 2024

அழகான சில்க் புடவையில் மிளிரும் நடிகை வாணி போஜன்… ட்ரெண்ட் ஃபோட்டோ ஷூட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் புகழ்பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் வாணி போஜன். ஊட்டியைச் சேர்ந்த அவர், கல்லூரி படிப்பை முடித்த பிறகு, கிங்பிஷர் மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களில் ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றி வந்தார். அதன்பின், நடிப்பின் மீது ஆர்வம் காரணமாக, மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். சென்னையில் சில்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் முதன்முதலாக நடித்த வாணி போஜன், அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அதன் பிறகு, 2020 ஆம் ஆண்டு நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில், ‘மீரா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு, ‘மகான்’, ‘மலேசியா முதல் அனிமேஷியா’, ‘மிரள்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘அஞ்சாமை’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

எல்லா படங்களிலும் முக்கியமான கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து தனது சினிமா முயற்சியில் செம்மையாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில், வாணி போஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான சில்க் புடவையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், ‘நயன்தாரா போல இருக்கீங்க’, ‘செம க்யூட்’ மற்றும் ‘கல்யாண ஃபங்ஷன் போறீங்களா?’ என கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News