2021 ஆம் ஆண்டில், சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, இதே குழுவுடன் ‘புஷ்பா 2’ உருவாகி வருகிறது. இதன் பட்ஜெட் ரூ.400 கோடிக்கு மேல் உள்ளது.

‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில், சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா’ பாடல் உலகளவில் வைரலானது. இதேபோல், ‘புஷ்பா 2’ படத்திலும் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

அந்த பாடலில் முதலில் ஸ்ரீ லீலா மற்றும் த்ரிப்தி டிமிரியை நடனமாட பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி, பாலிவுட் முன்னணி நடிகை ஷ்ரத்தா கபூர் இந்த பாடலில் நடனம் ஆடியுள்ளார். இதற்காக அவர் பெரும் தொகை சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.