Tuesday, October 22, 2024

இரட்டை வேடங்களில் நான்கு லுக்கில் நடிக்கும் அருண் விஜய்… ரெட்ட தல படத்தில் அருண் விஜய் எடுக்கும் அசுர அவதாரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1995-ம் ஆண்டு ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான அருண் விஜய், கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து, ‘தடம்’, ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தார். இவரது வெற்றிப்படங்கள் அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.

இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார், இது விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து, கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், தான்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார், மேலும் பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ளது.

அருண் விஜய் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கின்றார். ‘தடம்’ படத்திலும் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘ரெட்ட தல’ படத்தில் அவர் நான்கு விதமான தோற்றங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News