Monday, October 21, 2024

தங்கலான் ஓடிடி ரிலீஸ்க்கு தடையில்லை… வெளியான உத்தரவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘தங்கலான்’. இதில், விக்ரமுடன் சேர்ந்து பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், அர்ஜூன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று, ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. மேலும், இந்த திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியானதால், அதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாவது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘தங்கலான்’ படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், புத்த மதத்தைப் பற்றிய காட்சிகள் புனிதமாகவும், வைணவ மதத்தை நகைச்சுவையாகவும் சித்தரிக்கப்படுவதால், இப்படம் ஓ.டி.டியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வர, தணிக்கை சான்று பெற்றதற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் பின்னர், ‘தங்கலான்’ விரைவில் ஓ.டி.டியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News