Monday, October 21, 2024

மிகப்பெரிய சரிவை சந்தித்த ‘ஜிக்ரா’… அப்செட் ஆன ஆலியா பட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவர் நடித்த ‘ஜிக்ரா’ படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியானது. படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பைப் பெறாமல், முதல் நாளிலிருந்தே குறைவான வசூலைப் பெற்றது.

விமர்சகர்கள் கூறுகையில், பாலிவுட்டின் முக்கிய நடிகையான ஆலியா பட் நடிப்பில் கடந்த பத்து வருடங்களில் இவ்வாறு தோல்வியடைந்த படம் இதுதான். இதுவரை படம் 40 கோடிக்கும் மேலான வசூல் மட்டுமே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

படம் குறித்து வரும் எதிர்மறையான விமர்சனங்களின் காரணமாக, படத்தின் இயக்குனர் வாசன் பாலா எக்ஸ் தள கணக்கை ‘டீ ஆக்டிவேட்’ செய்துவிட்டார். இருப்பினும், இன்ஸ்டா தளத்தில் தொடர்ந்தும் செயல்படுகிறார். ஆலியா பட்டின் அடுத்த படமான ‘ஆல்பா’ 2025ல் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News