Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

“டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல நாளைக்கு 6:06க்கு வரேன்” சிம்பு கொடுக்கவுள்ள தனது அடுத்த படத்தின் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் கடைசியாக நடித்த ‘பத்து தல’ படம் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 48வது படத்தை உருவாக்க முடிவு செய்தனர், ஆனால் படப்பிடிப்பு பல மாதங்கள் கடந்தும் தொடங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, சிம்பு கமல்ஹாசனுடன் இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்றைய நிலையில் சிம்பு திடீரென தனது அடுத்த படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். “Dum + Manmadhan + Vallavan + Vtv in Gen Z mode = NAMBA NEXT!!!” என கூறி தனது அடுத்த படத்தை குறித்த ஹின்ட் கொடுத்துள்ளார்.

நாளை அக்டோபர் 21 அன்று, “டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல நாளைக்கு 6:06க்கு வரேன்” என கூறியுள்ளார். இதன்மூலம் அவரது அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிடவுள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News