Saturday, October 19, 2024

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவை இயக்குகிறாரா சுந்தர் சி? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தனது திரைப்பயணத்தை மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகத் தொடங்கிய அவர், குடும்பத் திரைப்படமான ‘முறை மாமன்’ மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

சமீபத்தில், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் சுந்தர் சியிடம் கதைகளை கேட்டு வருகின்றனர். தற்போது, சுந்தர் சி ‘கேங்கர்ஸ்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் வடிவேலு, கத்ரீன் தெரசா, பக்ஸ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கவுள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த இரண்டு படங்களின் வேலைகளை முடித்ததும், சுந்தர் சி, ரவிதேஜா நடிக்கவுள்ள தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார். இதுதொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெற உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News