Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

நடிகர் அர்ஜூன் கதையில் துருவ் சார்ஜா நடிப்பில் வெளியான மார்ட்டின்… குவிந்த விமர்சனங்கள் ‘ஜான் டோ’ -ஐ கையில் எடுத்த படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அர்ஜுனின் கதையில், அவரது சகோதரி மகன் துருவ் சர்ஜா நாயகனாக நடிக்கும், எ.பி. அர்ஜுன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த கன்னடத் திரைப்படம் ‘மார்ட்டின்’. இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டுள்ளனர்.

படத்தை டியூபர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதில் சிலரின் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காப்புரிமை சிக்கலில் சிக்காமல் இருக்க சிலர் தங்களது வீடியோக்களை பின்னர் நீக்கியதாகவும் தெரிகிறது.படத்திற்கு எதிராக தற்செயலாக சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளதாக படக்குழு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் படத்தைப் பாதுகாக்க ‘ஜான் டோ’ ஆணையை அவர்கள் பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முகம் தெரியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது ‘ஜான் டோ’ ஆணை. விதிமீறல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் நடக்கும் சூழலில், எல்லோரையும் அடையாளம் காண முடியாதபோது ஜான் டோ உத்தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. யாரென்றே தெரியாத இணைய பயனாளிகளுக்கு எதிராக ஒரு நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்க இந்த ஆணை பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள்.

பல கோடிகள் செலவழித்து உருவாக்கப்பட்ட தங்களது படத்தின் வர்த்தகத்தை பாதிக்கும் விதமாக நடந்து கொள்பவர்களைத் தடுக்க ஜான் டோ ஆணையைப் பெற்றுள்ளதாக தயாரிப்பாளரும் கூறியுள்ளார்.இந்த விவகாரம் கன்னடத் திரையுலகத்திலும், விமர்சகர்களிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, மலையாள சினிமாவில், ஒரு தயாரிப்பாளர் தனது படத்திற்கு யாரும் ஏழு நாட்களுக்கு யு டியூப் விமர்சனங்களை செய்யக்கூடாது என நீதிமன்றத்தை நாடிய சம்பவமும் நடந்தது.

ஜான் டோ ஆணை பொதுவாக திரைப்படங்கள் மற்றும் இசை சார்ந்த அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தற்போது அதை திரைப்பட விமர்சனங்களுக்கும் பயன்படுத்த தொடங்கியுள்ளார்களா என்ற சந்தேகம் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

திரைப்படங்களின் காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக ஜான் டோ ஆணைகள் முன்னர் சில ஹிந்திப் படங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், விமர்சனங்களைத் தடுக்கும் வகையிலோ அல்லது தடை செய்யும் வகையிலோ அவை பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News