Friday, October 18, 2024

கூலிங் கிளாஸூடன் க்ளாஸான அஜித் குமாரின் செல்ஃபி வைரல்! #GoodBadUgly

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித்குமார் தற்போது “குட் பேட் அக்லி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஏற்கெனவே “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகி, தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், அஜித்குமார் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள GT4 Championship 2025 கார் பந்தயத்தில் பங்கேற்க தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதேசமயம் இடத்தில், தற்போது ஸ்பெயினில் நடைபெறும் “குட் பேட் அக்லி” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிலும் அவர் கலந்துகொண்டு வருகிறார். ஒவ்வொரு நாளும், அஜித்தின் புதிய புகைப்படம் அல்லது வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த சூழலில், அஜித் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அந்த புகைப்படத்தில் அஜித்குமார் கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்திருக்கிறார். மேலும், இந்த செல்ஃபி அக்டோபர் 17 ஆம் தேதி மதியம் 12:15 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது.இது குட் பேட் அக்லி படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News