நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ரிவால்வர் ரீட்டா படத்தின்.தி ரூட் மற்றும் தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தை சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே. சந்துரு எழுதி இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் முடிந்தது.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த ரகு தாத்தா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் ரீவால்வர் ரீட்டா திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படம் மூலம் எப்படியாவது கம் பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த டைட்டில் டீசரில் எங் ஆன லுக்கில் காணப்படும் கீர்த்தி சுரேஷிடம் இருந்து திருடர்கள் அவரின் ஹேண்ட் பேக் பறித்து செல்ல அவரை தூரத்துகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த ஹேண்ட் பேக்-ஐ சோதனை செய்தால் அதில் துப்பாக்கி, ரத்தம் படிந்த கத்தி, வெடிகுண்டு உள்ளவற்றை கண்டு அவர்கள் அதிர்ச்சியாக அங்கு மாஸாக என்ட்ரி ஆகிறார் கீர்த்தி சுரேஷ். இப்படி விறுவிறுப்பும் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது ரீவால்வர் ரீட்டா திரைப்படம்.