பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ்டர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனாவுக்கு இதுவரை 4 முறை தேசிய விருதுகள் தரப்பட்டுள்ளன.எமர்ஜென்சி படத்தினை கங்கனா ரணாவத்தே இயக்கியுள்ளார். உடன் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தப் படத்தை தணிக்கை செய்யவிடாமல் மிரட்டுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது எங்களது எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்ற செய்தியினை மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம். ரிலீஸ் தேதி எப்போது என விரைவில் அறிவிக்கிறோம். ஆதரவுக்கும் பொறுமையாக காத்திருந்தமைக்கும் மிக்க நன்றி என்றார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more