ரெஜினா’ படத்திற்கு பிறகு, ‘ராக்கெட் டிரைவர்’ என்ற படத்தில் சுனைனா நடித்துள்ளார். விஷ்வத் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார், மற்றும் இப்படத்தை ஸ்ரீராம் ஆனந்த சங்கர் இயக்கியுள்ளார். சுனைனா தற்போது இப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில், லிவிங் டு கெதர் வாழ்க்கை குறித்து கேட்ட ஊடகவாளர்களின் கேள்விக்கு அவர் கடும் கோபமாக பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, ”நான் எப்போதுமே சினிமாவையே காதலிக்கிறேன். யாருடனும் எனக்கு காதல் இல்லை. வெப்சீரிஸ் பார்ப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறேன். அதன் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்,” என்று சுனைனா தெரிவித்தார்.
சமீபத்தில் சுனைனா ஒரு புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டார், அதில் யாரோ ஒருவரின் கையைப் பிடித்து இருப்பது போன்ற புகைப்படம். அது யூடியூபர் காலித் அல் அமேரியுடன் எடுத்த புகைப்படம் என்று தகவல்கள் வந்தன. மேலும், அவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவே சுனைனா இப்போது அந்த தகவல்களை மறுத்துள்ளார்.