சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “கங்குவா” படம் விரைவில் வெளியாகவுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் முதலில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதே நாளில் “வேட்டையன்” ரிலீஸ் ஆன காரணத்தால், “கங்குவா” படத்தின் வெளியீடு நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. இந்த படம் பான் இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “சூர்யா 44” படத்தில் நடித்துள்ளார். மேலும், “சூர்யா 45” படத்தின் அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் ஆன்மீகக் குறியீடுகளான அரிவாள், வேல், மற்றும் குதிரையின் உருவம் இடம்பெற்றுள்ளதால், இப்படம் எந்தவிதமான கதையில் உருவாக இருக்கிறது என்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகை காஷ்மீரா பர்தேஷி “சூர்யா 45” படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஜீவாவின் “வரலாறு முக்கியம்”, ஹிப் ஹாப் ஆதியின் “அன்பறிவ்”, மற்றும் “பிடி சார்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் “சூர்யா 45” படத்திலும் நடிக்கவுள்ளார்.