Wednesday, October 16, 2024

விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன் ‘… தலைப்பின் அர்த்தமும் படத்தின் கதைக்களமும் என்ன தெரியுமா? #GaGaNaMaargan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“அட்டக்கத்தி”, “பீட்சா”, “சூது கவ்வும்”, “இன்று நேற்று நாளை”, “தெகிடி”, “முண்டாசுப்பட்டி” போன்ற பல வெற்றிப் படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் லியோ ஜான் பால். இவர் இயக்கும் முதல் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு “ககன மார்கன்” என்று பெயரிட்டுள்ளனர். “ககன மார்கன்” என்பது சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள்படும்.

இந்த படத்தில், விஜய் ஆண்டனி ஒரு உயர் காவல் அதிகாரியாக, மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஒரு மர்மமான கொலையை அடிப்படையாகக் கொண்டு, கிரைம் திரில்லர் படமாக இல்லாமல், புதிய வகையான கதாபாத்திரங்கள் மற்றும் தமிழ் பாரம்பரியத்தை உள்ளடக்கிய வித்தியாசமான புலனாய்வு திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் நீருக்கடியில் (அண்டர் வாட்டர்) நடைபெறும் ஒரு முக்கிய காட்சி இருப்பதால், அதனை மும்பையில் படமாக்கியுள்ளனர்.

அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். தீப்ஷிகா, “கலக்கப்போவது யாரு” புகழ் அர்ச்சனா, கனிமொழி, “அந்தகாரம்” நட்ராஜன் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்து, தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், மற்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News