நடிகை திரிஷா தற்போது அஜித் உடன் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்பாக, மணிரத்னத்தின் ‘தக்லைப்’ படத்தில் தனது கதாபாத்திரத்தை நடித்து முடித்துள்ளார். தனது தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு வருவது அவருக்கு ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. இப்போது, விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உட்பட சில தோழிகளுடன் வெளிநாட்டுக்கு விடுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விடுமுறை வீடியோவை அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “நாங்கள் 6 பேர் 16 பெட்டியுடன் பயணித்தோம்” என்று அவர் குறிப்பிட்ட நிலையில், திரிஷா, “நான் 48 மணி நேரம் தூங்காமல் 24 மணி நேரம் பயணம் செய்தேன்” என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

