Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை… விமலின் ‘சார்’ படம் குறித்து பகிர்ந்த நடிகர் விஜய் சேதுபதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

போஸ் வெங்கட் விமல் நடிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் “சார்” இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், “சார்” திரைப்படம் வரும் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. திரைப்பிரபலங்கள் இப்படத்தை முன்னதாக பார்த்து, தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் ஒளிப்பதிவாளர் நட்டி, மைம் கோபி, ரியோ ஆகியோர் படம் குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி படத்தை பார்த்து, அதை மிகவும் பாராட்டியுள்ளார்.

அவர் குறிப்பிட்டுப் பேசுவதில், “இந்த திரைப்படம் கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வியின் தேவையையும், கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை என்பதையும் மிகவும் அழகாகக் கூறுகிறது. ஒரு குழந்தைக்கு கல்வி பெறுவதில் தடையாக இருந்தாலும், அது கடவுள் என்றாலும் கூட அது தவறு என்பதையே இந்த படம் விளக்குகிறது” என பாராட்டியுள்ளார். படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

- Advertisement -

Read more

Local News