Tuesday, October 15, 2024

நடிகை இனியா உட்பட மூன்று நாயகிகள் நடிக்கும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இனிது இனிது மற்றும் மிஷ்கின் இசையமைத்த “டெவில்” உள்ளிட்ட சில படங்களில் நடித்த த்ரிகுண், தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் “ஸ்வீட்டி நாட்டி கிரேஸி”. இந்தப் படத்தை அனு விஷுவல்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி.எம்.ஆர். ரமேஷ் மற்றும் ஆர். அருண் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ஜி. ராஜசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார், மற்றும் விஜய் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, “சுந்தரா டிராவல்ஸ்” ராதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

படத்தைப் பற்றி த்ரிகுண் கூறும்போது, “எனக்கு கோவைதான் சொந்த ஊர். நான் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும், இங்கு பார்ப்பவர்கள் ‘தமிழ்ல என்ன படம் பண்றீங்க?’ என்று கேட்கும் போது வருத்தமாக இருக்கும். அதனால் தமிழில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் ராஜசேகர் இந்தப் படத்தின் கதையை சொன்னார்.

இந்தப் படத்துக்காக, ஈசிஆரில் ஒரு பாடல் காட்சியை படமாக்கினோம். அதே இடத்தில் நான் துணை நடிகராக நடித்திருந்தேன், இப்போது ஹீரோவாக நடித்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இதில் மூன்று கதாநாயகிகள் உள்ளனர். அவர்களிடம் மாட்டிக்கொண்டு, ஹீரோ எந்தளவுக்கு பாடுபடுகிறார் என்பதே கதை. இது ஒரு ரொமான்ஸ் காமெடி திரைப்படம். அனைவருக்கும் பிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News