Friday, October 11, 2024

த்ரில்லர் படமான லெவன் படத்தில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ள The Devil Is Waiting பாடல் வெளியானது! #ELEVEN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘லெவன்’. இன்று அந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். டி. இமான் இசையமைத்த, ஆற்றல்மிக்க அந்த பாடலை பிரபல நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். ‘லெவன்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜ்ல்ஸ் இந்த பாடலின் வரிகளை முழுமையாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை முன்னணி இசை நிறுவனமான சரேகாமா வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர் சி-யின் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘ஆக்ஷன்’ போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் தான் லோகேஷ் அஜ்ல்ஸ். இப்போது அவர் ‘லெவன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த முதல் சிங்கிள் பாடலைப் பற்றி இயக்குநர் கூறுகையில், “தி டெவில் இஸ் வெயிட்டிங்’ என்பது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு உயர்தரமான ஆற்றல்மிக்க பாடல். டி. இம்மானின் இசையும், ஸ்ருதி ஹாசனின் குரலும் இந்த பாடலுக்கு மிகப்பெரிய பலம், என அவர் கூறினார்.

ஏஆர் என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் அஜ்மல் கான் மற்றும் ரேயா ஹரி தயாரித்து, லோகேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில், நவீன் சந்திரா நடிப்பில் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படம் நவம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News