Friday, October 11, 2024

விடுதலை 2ம் பாகம் மட்டும் இல்லையாம்… 3ம் பாகமும் இருக்காம்… தீயாய் பரவும் தகவல்! #VIDUTHALAI PART2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தொடர்ச்சியாக “வடசென்னை”, “அசுரன்” போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெற்றிமாறன், கடைசியாக 2023ஆம் ஆண்டு “விடுதலை” என்கிற திரைப்படத்தை இயக்கினார். நடிகர் சூரி, முழுமையாக ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறியதற்கு முதன்மையான காரணம் இந்த “விடுதலை” திரைப்படமே. அந்தப் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன், வெளியான சில நாட்களிலேயே “விடுதலை” படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளை தொடங்கினார்.

ஆனால், சுமார் ஒரு வருடம் கடந்த பிறகும் அந்தப் படத்தின் குறித்த முக்கியமான தகவல்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் அண்மையில் “விடுதலை” படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் இணைந்து “விடுதலை 2” படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார்கள். எனவே, டிசம்பர் மாதம் இறுதியில் “விடுதலை” படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்பதும் உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், “விடுதலை 2” படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால், அதை இரண்டு பாகங்களாக பிரித்து வெளியிட வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம். இதனால், “விடுதலை” படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News