Thursday, October 10, 2024

நடிப்பு ஒருபக்கம் இயக்கம் ஒருபக்கம் என பிசியாக இருக்கும் தனுஷ்… இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். “பிளாக்பஸ்டர்” வெற்றியைத் தொடர்ந்து, தனுஷின் நான்காவது இயக்குநர் படமாக “இட்லி கடை” உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். “பீல் குட்” படமாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில்‌ துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தனுஷ் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், தனுஷ் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் “குபேரா” படத்திலும் நடித்துள்ளார்.

தனுஷ் தற்போது இயக்கத்திலும் நடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ள நடிகர் தனுஷ் அதன் படப்பிடிப்பு தொடங்க இன்னும் காலதாமாதம் ஆகலாம் என கூறப்படுகிறது ‌ இதற்கு காரணம் அவர் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளிவரவுள்ள படங்களின் பணிகளை முடித்தபின்னரே பயோபிக் படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News