Friday, October 11, 2024

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த ‘குட் பேட் அக்லி’ படத்திற்கான‌ அஜித்தின் ஸ்டைலிஷ் லுக்! #GoodBadUgly

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு “குட் பேட் அக்லி” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது, மேலும் இணையத்தில் வைரலானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். “குட் பேட் அக்லி” படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியாகியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று முடிவடைந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்றை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்திற்கான ஸ்டைலிஷ் லுக்கில் நடிகர் அஜித் மாஸாக போஸ் கொடுக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News