Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

‘காட்டுப்பயலே பாடலுக்கு’ கச்சிதமாக நடனமாடிய ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷிவானி நாராயணன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் முக்கியமான இடத்தை பிடித்த நடிகை ஷிவானி நாராயணன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலராலும் விரும்பப்பட்டவராக மாறினார்.

இன்ஸ்டாகிராமில் நான்கு மில்லியன் பின்தொடர்பவர்கள் கொண்ட இவருக்கு, சீரியல் வாய்ப்புகள் கிடைக்க காரணமாக இருந்தது இன்ஸ்டாகிராம்தான். விஜய் டிவியில், பகல் நிலவு, சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்துக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் தங்கியிருந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமாகிறார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிடும் ஷிவானி, கோட் படத்தில் விஜய், த்ரிஷா நடித்த ஆட்டம் பேட்ட பாடலுக்கு அழகாக நடனம் ஆடி, ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தினார். இதைத் தொடர்ந்து, தற்போது பாவாடை தாவணியில் சூரரைப்போற்று படத்தின் காட்டுப்பயலே பாடலுக்கு நடனம் ஆடியுள்ள அவர், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News