Tuesday, October 8, 2024

இந்த படம் ஆங்கில படத்தோட ரீமேக் தான்… பகிர்ந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குனர் பாலசுப்ரமணி இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில் ஜீவா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து, அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வரவுள்ள படம் ‘பிளாக்’. இப்படத்தின் ட்ரைலர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன்பின், இந்த படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று பல ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

சிலர் இதனை ‘கோஹெரன்ட்’ படத்தின் காப்பி எனக் கூற, மற்றவர்கள் ‘விவாரியம்’ படத்துடன் ஒப்பிட்டனர். ‘விவாரியம்’ படத்தின் ட்ரைலருக்கும், ‘பிளாக்’ படத்தின் ட்ரைலருக்கும் அதிக ஒற்றுமை உள்ளது. புதிதாக கட்டப்பட்ட வில்லா குடியிருப்பில், முதல் குடும்பமாக நுழையும் கணவன்-மனைவி சந்திக்கும் மர்மங்கள் ‘விவாரியம்’ படத்தின் மையக்கரு போன்றே ‘பிளாக்’ ட்ரைலரிலும் இடம்பெற்றுள்ளன.

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசும்போது, “ட்ரைலர் வெளியான பிறகு, பல்வேறு கருத்துகள் வந்தன. இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களை எடுத்துள்ளோம். ஆனால், ரீமேக் படங்களை எடுத்ததில்லை. இதுவே முதல் ரீமேக் படம். இதன் மூலம், ஒரு ஆங்கிலப் படத்தின் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. முறையாக அதற்கான உரிமையை வாங்கி எடுக்கப்பட்டுள்ளது. எந்த படத்தின் ரீமேக் என்பதைப் பற்றி படம் வெளியான பின்பு பேசுவோம், என்றார். படத்தின் தலைப்பில் அது பற்றிய ‘அறிவிப்பு கார்டு’ இடம்பெறும், அப்போது ரசிகர்கள் எந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்பதை அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

Read more

Local News