‘விடாமுயற்சி’ படத்துக்குப் பிறகு, அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடிக்க, இப்படத்தில் சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் குமார் மற்றும் பிரசன்னா இணைந்து நடித்த சில காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது.
இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்து, இப்படியொரு தவறான செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியதுடன், படப்பிடிப்பு இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளார்.
மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது படப்பிடிப்பை வேகமாக மேற்கொண்டு, இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக முடித்து, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘குட் பேட் அக்லி’யை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.