Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிரேமலு படம் போல் 2கே லவ் ஸ்டோரி-ம் உங்களை கவரும்.‌.. இயக்குனர் சுசீந்திரன் உறுதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள படம் ‘2கே லவ் ஸ்டோரி’. இந்த படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார், இதில் புதுமுகமான ஜெகவீர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இசையமைப்பாளராக இமான் பணியாற்றுகிறார், மற்றும் ஒளிப்பதிவு அனந்த கிருஷ்ணன் மேற்கொள்கிறார்.

படத்தின் அறிமுக விழாவில், புதுமுகமான ஜெகவீரை ராமராஜன் அறிமுகப்படுத்தினார். விழாவில் சுசீந்திரன் பேசியது, ”2கே லவ் ஸ்டோரி’ என்னை மீண்டும் தன்னம்பிக்கையுடன் நிற்க வைத்த படம். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தைப்போல், இந்த படத்தின் தயாரிப்பிலும் நிறைய நேர்மறை நிகழ்வுகள் நடந்தது. இயற்கைவே பல விஷயங்களை சுலபமாக செய்து தந்தது. நான் நாயகனை ஓர் ஆபீசில் சந்தித்தபோது, “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் ஒரு புராஜெக்ட் செய்கிறேன் என்றார். அப்படியென்றால், நாம் ஒரு படம் பண்ணலாம் என்றேன். இதற்கு முன்பு நான் பணியாற்றிய ஹீரோக்களிடம் கூட இப்படிச் சொல்லியதில்லை. ஆனால் அவர் உடனடியாக சம்மதித்தார்.

நான் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தை உருவாக்கும்போது, யார் தயாரிப்பாளர் என்பது தெரியாமலேயே தொடங்கினேன். இதேபோல், இந்த படத்திற்கும் தயாரிப்பாளர் தானாகவே வந்தார். படத்தில் பணியாற்றியவர்கள் பலரும் அதேபோல் சேர்ந்தனர். இந்த படத்தில் நிறைய புதுமுகங்களை சேர்த்துள்ளேன். படமே ஜாலியாக இருக்கும். ‘பிரேமலு’ மாதிரி மிகப் பெரிய வெற்றியை அடையும் படமாக இது இருக்கும்.

‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு, என் நண்பன் “உனக்கு தன்னம்பிக்கை இல்லை” எனச் சொல்வான். ஆனால், இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்று நான் தன்னம்பிக்கையுடன் கூறுகிறேன். தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி எப்படி வந்தாரோ, அதேபோல் ஜெகவீர் ஒரு முன்னணி ஹீரோவாக ஜொலிப்பார். சினிமாவின் மீது பெரும் ஆர்வம் கொண்ட இளைஞன், சூரி, விஷ்ணு போன்றவர்களைப் போல ஜெகவீரும் பிரகாசமாகத் திகழ்வார்’ என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News