Saturday, October 5, 2024

அது ரியல் இல்லையாம்… ரீல்லாம்… நடிகை வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் உடைத்த சஸ்பென்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜயகுமாரின் மகளாகிய வனிதா விஜயகுமார் பிசியான நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். அவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வருவதோடு, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரும் கவனம் ஈர்த்தார்.  

2020 ஆம் ஆண்டில் வனிதாவுக்கும் பீட்டர்பால் என்பவருக்கும் திருமணம் நடந்தது, ஆனால் சில நாட்களிலேயே அவர்கள் இருவரும் பிரிந்ததோடு, பீட்டர் திடீரென மரணமடைந்தார். வனிதா, தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்வதைத் தொடர்வதாக சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.  

சமீபத்தில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராபர்ட் மாஸ்டருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவேற்றினார். அதில், அக்டோபர் 5-ம் தேதியை குறித்துக் கொண்டு குறிப்பிட்டிருந்ததால், அவரின் திருமண அறிவிப்பு என பலரும் சந்தேகித்தார்கள்.  பின்னர் அது, “மிஸ்டர் & மிஸ்ஸஸ்” என்கிற புதிய படத்தின் போஸ்டர் என்று தெரியவந்தது. இந்தப் படத்தின் அறிவிப்பு நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது, மேலும் இது யூடியூபில் டிரெண்டிங்கில் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்தப் படத்தை ஜோவிகா விஜயகுமார் தயாரிக்க, வனிதா விஜயகுமார் இயக்கி நடிக்கிறார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். 

- Advertisement -

Read more

Local News