Saturday, October 5, 2024

புன்னகை தேசம் படத்தின் நடிகருக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஹம்சவிர்தன், நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘மகேஸ்வரா’வின் முதல் கட்ட படப்பிடிப்பு, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. ரெட் டிராகன் எண்டர்டெயின்மென்ட் பேனரில் ஹம்சவிர்தன் தயாரிக்கும் இந்த படத்தை, சமீபத்தில் வெளியான ‘ஹரா’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார்.  

உயர்தர பென்ஸ் கார் ஒன்றை முற்றிலும் நொறுக்கி தரைமட்டமாக்கும் சண்டைக் காட்சி, அரியலூர் நெடுஞ்சாலையில் முக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் தலைமையில் படமாக்கப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதனால் ஹம்சவிர்தன் உள்ளிட்டோர் சிறு காயங்களுடன் தப்பினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.  

ராம்கி, ‘கே ஜி எஃப்’ புகழ் கருடா ராம், பி எல் தேனப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றனர். முக்கிய நட்சத்திரங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் பங்கேற்கின்றனர். சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கமர்ஷியல் படமாக உருவாகும் ‘மகேஸ்வரா’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா, பொலிவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திட்டமிடப்பட்டுள்ளது.  

மோகன் குமார் ஒளிப்பதிவு செய்ய, ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கின்றார். நிகில் முருகன் மக்கள் தொடர்புப் பணிகளை கவனிக்கிறார். இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஹம்சவிர்தன் ‘மகேஸ்வரா’வில் நடிக்கிறார். அதிக செலவில், விறுவிறுப்பான கதையமைப்பில் உருவாகும் இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். 

- Advertisement -

Read more

Local News