நடிகர் உன்னி முகுந்தன் மலையாள திரைப்படங்களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள அவர், கேரள ரசிகர்களை மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களிடமும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளார். அந்த வகையில், தமிழ் திரைப்படமான தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘சீடன்’ படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர், சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ படத்தில் வில்லனாக சிறப்பாக நடித்தார் உன்னி முகுந்தன்.
தற்போது, அவர் ‘மார்கோ’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹனீப் அடேனி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, ‘கேஜிஎப்’, ‘சலார்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இப்படம் ஆக்சன் மற்றும் திரில்லர் கதையம்சத்துடன் உருவாகியுள்ளது.
இதில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ், அபிமன்யு போன்ற பலரும் நடித்துள்ளனர். மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது. இன்று நடிகர் உன்னி முகுந்தன் ‘மார்கோ’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார், மேலும் இத்திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.