Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிரபல பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர்.மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கி கௌரவித்த தமிழக முதல்வர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா, ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில், 1935 நவம்பர் 13ஆம் தேதி பிறந்தவர். 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடி பல சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார். தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றதுடன், இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

அதேபோல, கவிஞர் முகமது மேத்தா, பெரியகுளத்தில் 1945 செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்தவர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் போன்ற பல நூல்களை உருவாக்கியதுடன், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். ‘சாகித்ய அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

கலைத்துறையில் இவர்களின் பணியை பாராட்டி, கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, இன்று (அக்டோபர் 4) சென்னை தலைமைச் செயலகத்தில், பி. சுசீலா மற்றும் மு. மேத்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார். விருதுடன், அவர்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள காசோலையும் வழங்கப்பட்டது.

- Advertisement -

Read more

Local News