Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். ரஜினி, ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தில் நடித்து வந்தார். ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்.  

திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, செப்டம்பர் 30-ஆம் தேதி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் இருந்தது.  

அந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக் குழாயில் வீக்கத்தை குணப்படுத்த ஸ்டன்ட் பொருத்தப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்ட அவரின் உடல்நிலை சீராகியதனைத் தொடர்ந்து, நேற்று இரவு வீடு திரும்பினார்.  

- Advertisement -

Read more

Local News