Wednesday, October 2, 2024

நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸா? கசிந்த புதிய தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோவின் சசிகாந்த், “தமிழ் படம் 1”, “தமிழ் படம் 2”, “விக்ரம் வேதா”, “ஜகமே தந்திரம்” போன்ற பல திரைப்படங்களைத் தயாரித்தவர். இப்போது அவர் முதல் முறையாக இயக்கி, தயாரித்து வரும் படம் “தி டெஸ்ட்.

இந்தப் படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது வெளியான தகவலின் படி, இந்த படத்தை நேரடியாக 2025 ஆம் ஆண்டில் ஓடிடி வெளியீடாக வெளியிட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சசிகாந்த் தயாரித்த “ஜகமே தந்திரம்” படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News