Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கடைசிக் கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள மம்மூட்டியின் ‘டோம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்’… கௌதம் மேனன் இவ்வளவு பாஸ்ட்டா இருக்கிறாரே!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன், மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்களின் மூலம் ட்ரெண்ட் செட்டிங் இயக்குனராக நிலை பெற்றார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், அவரது சில பணப் பிரச்சினைகள் காரணமாக வேறு திரைப்படங்களை இயக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கௌதம் மேனன் மலையாள சினிமாவில் இயக்குனராக முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார். மம்மூட்டி நடிக்கும் ஒரு புதிய படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை மம்மூட்டியின் ‘மம்மூட்டி கம்பெனி’ தயாரிக்கிறது.

இப்படத்தின் 90% ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது, படத்தின் தலைப்பு ‘டோம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்’ என அறிவிக்கப்பட்டிருந்தது மேலும், மம்மூட்டி இரவுக்கு வீட்டின் அருகே நிற்பது போன்ற போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இப்படம் ஆண் பெண் இடையேயான உறவை பற்றி மையமாகக் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News