தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், “குட்பேட் அக்லி” படமும் அடுத்தாண்டு திரையரங்குகளில் வர உள்ளது. அஜித் குமார் பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்.
சூட்டிங் இல்லாத நேரங்களில் தனது பைக்கை எடுத்துக் கொண்டு, நண்பர்களுடன் மோட்டார் பயணம் செல்லுவதையே அவர் ஒரு வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அவர் ஐரோப்பிய கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார் என்ற செய்தி வெளியிடப்பட்டது. இதே நேரத்தில், அஜித் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தரும் வகையில் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ‘அஜித் கார் ரேசிங்’ என்ற கார் பந்தய அணியை நடிகர் அஜித் தொடங்கியுள்ளார்.
இதற்கான அறிவிப்பை நடிகர் அஜித்தின் மேலாளர் வெளிப்படுத்தினார். மேலும், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் டபியூ என்பவர் இந்த அணியின் அதிகாரபூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார் என்றும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24 எச் கார் பந்தயத்தில் போர்ஷே 992 ஜிடி3 கப் பிரிவில் ‘அஜித் குமார் ரேசிங்’ அணி பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.