Saturday, September 28, 2024

வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ள அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன்… வெளியான முதல் பார்வை போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அதியன் ஆதிரை இயக்கத்தில், 2019-ம் ஆண்டு அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு, ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படம் ‘தண்டகாரண்யம்’. இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் தினேஷ் தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதையடுத்து, இயக்குநர் பா.ரஞ்சித், தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தண்டகாரண்யம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News