நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தனுஷின் ‘ராயன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து, தெலுங்கில் ஆர்டிஐ எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதை தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது.

வரலட்சுமி, இதில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞராக நடித்துள்ளார். படத்தில் அவரது தந்தையாக ரவிசங்கர் வழக்கறிஞராக நடித்துள்ளார், இருவரும் ஒரு தற்கொலை வழக்கில் நேருக்கு நேர் மோதுவது இந்த படத்தின் முக்கியமான பகுதி. இந்த படம், திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஈடிவி ஓடிடி தளத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.