Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

‘கண்ணப்பா’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை தொடர்பான ‘கண்ணப்பா’ என்ற பெயரில் தெலுங்கில் ஒரு திரைப்படம் தயாராகிறது. இந்த பான் இந்தியா படத்திற்கு சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட் உள்ளது. இந்த படத்தை தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் அவரது மகள் லட்சுமி மஞ்சு இணைந்து தயாரிக்கிறார்கள். மகன் விஷ்ணு மஞ்சு, கண்ணப்பராக நடிக்கிறார். சரத்குமார், மோகன்பாபு, மது, முகேஷ் ரிஷி, பரம்மானந்தம், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பான் இந்தியா நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகின்றனர்.

இந்த படத்தில் தமிழ் நடிகையான ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர், பிரபல நடிகை லட்சுமியின் மகளாவார். ஐஸ்வர்யா தென்னிந்திய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தமிழில் நாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமா வாய்ப்புகள் குறைவானபோது, அவர் ஏராளமான டி.வி. தொடர்களில் நடித்தார். அவ்வப்போது சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு, டாடா, யானை போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது ‘கண்ணப்பா’ படத்தில் அவர் மாரியம்மா என்ற காட்டில் வாழும் சூனியக்காரியாக நடித்துள்ளார். படக்குழு, அவரது தோற்றத்தை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News